×

சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்டவாக்காளர் பட்டியல் படிவங்கள் ஆய்வு

கரூர், டிச.25: கரூர் மாவட்டம் புகளூர் வட்டம், காருடையம்பாளையம், புதுக்கநல்லி, சின்னாண்டாங்கோயில், வஞ்சியம்மன் கோயில் தெரு, மணவாடி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024ல் கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வீரராகவராவ், மாவட்ட கலெக்டர் தங்கவேல் முன்னிலையில் நேற்று ஆய்வு மேற்கொண்டார்.கரூர் மாவட்டம் புகளூர் வட்டம், காருடையம்பாளையம், புதுக்கநல்லி, கரூர் வட்டம் காந்திபுரம், சின்னாண்டாங்கோயில், வஞ்சியம்மன் கோயில் தெரு, கிருஷ்ணராயபுரம் வட்டம் மணவாடி ஆகிய பகுதிகளில் வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்க முறை திருத்தம் 2024ல் கரூர் மாவட்டத்தில் பெறப்பட்ட புதிய வாக்காளர்கள் பெயர், நீக்கல் மற்றும் திருத்த படிவங்களை கரூர் மாவட்ட வாக்காளர் பட்டியல் பார்வையாளர் வீரராகவராவ், மாவட்ட கலெக்டர் தங்கவேல் முன்னிலையில் அரவக்குறிச்சி தொகுதியில் 2 படிவங்களையும், கரூர் தொகுதியில் 3 படிவங்களையும், கிருஷ்ணராயபுரம் தொகுதியில் 1 படிவத்தையும் ஆய்வு செய்தார்.இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் கண்ணன், கோட்டாட்சியர் ரூபினா, குளித்தலை கோட்டாட்சியர் ரவி, தாசில்தார்கள் முருகன், வெங்கடேஷ், மோகன்ராஜ் உள்பட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

The post சுருக்கமுறை திருத்தம் செய்யப்பட்டவாக்காளர் பட்டியல் படிவங்கள் ஆய்வு appeared first on Dinakaran.

Tags : Karur ,Buklur Circle ,Garudhampalayam ,Pudukanalli ,Chinnandangoil ,Vanjiamman Koil Street ,Manavadi ,
× RELATED கரூர் சுங்ககேட் அருகே அடையாளம் தெரியாத நபர் மயங்கி விழுந்து சாவு